வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை!!

சென்னை: ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. ஜூன் 1ம் தேதி 7வது இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்ததும், ஜூன் 4ம் தேதி காலை 7 மணிக்கு நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணியும் அதைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. இதற்கான பணியில் ஆயிரக்கணக்கான ஊழியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

இந்நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் அறிவிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால் சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை!! appeared first on Dinakaran.

Related Stories: