அதற்கு நான் மறுத்துவிட்டேன். அப்போது எனது மகளை அவர்களிடம் இருந்து மீட்டு விசாரித்த போது, என்னை மிரட்டிய காவலர் கையில் ஊசி ஏற்றினார். உடல் முழுவதும் வலிக்கிறது என்று கூறியபடி எனது மகள் மயங்கிவிட்டார். உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தேன். அங்கு மருத்துவ பரிசோதனையில் எனது மகளுக்கு பாலியல் தொந்தரவு நடந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின் மீது ஆயிரம்விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமிக்கு போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் நபர், ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ராஜி என்று தெரியவந்துள்ளது. இருந்தாலும் போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியிடம் என்ன நடந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் சிறுமிக்கு போதை ஊசி போடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post வீட்டின் அருகே விளையாடியபோது அழைத்து 8 வயது சிறுமிக்கு போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு: எஸ்ஐ மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.
