இந்நிலையில், கடந்த 8ம் தேதி மகளிர் தினத்தன்று வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (ஏப்ரல்) புதிய விலை பட்டியலை நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்ட விலையே நீடிப்பதாக தெரிவித்துள்ளது. அதேவேளையில் கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.23.50 அதிகரிக்கப்பட்டது. நடப்பு மாதத்தில் நேற்று ரூ.30.50 குறைக்கப்பட்டது. கடந்த மாதம் சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,960.50 ஆக இருந்த நிலையில் ரூ.30.50 குறைக்கப்பட்டதால் ரூ.1930 ஆகவும், சேலத்தில் ரூ.1,909ல் இருந்து ரூ.1,878.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
The post வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.30.50 குறைப்பு: சென்னையில் ரூ.1930 ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.