மனிதர்கள் வணிக ரீதியாக விண்வெளி பயணம்: விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் சாதனை

வாஷிங்டன்: மனிதர்கள் வணிக ரீதியாக விண்வெளி பயணம் மேற்கொள்ள முடியும் என விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் சாதித்து காட்டியுள்ளது. பிரிட்டன் வணிகர், பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் நேற்று இரவு தனது முதல் வணிக விண்வெளிப் பயணத்தை தொடங்குகிறது. முதல் சுற்றுலா சேவைக்கு கேலக்டிக் 01 எனப் பெயரிடப்பட்டுள்ளது. விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தனது இணையதளத்திலும், யூடியூப் பக்கத்தில் விண்வெளிப் பயணத்தை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது.

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து விமானம் ஏவப்படுகிறது. விர்ஜின் கேலக்டிக் 01 விமானத்தில் 3 இத்தாலியர்கள், ஒரு நிறுவன விமானப் பயிற்சியாளர் பயணம் செய்ய உள்ளனர். 2 விமானிகள் உள்ளிட்ட 5 பேருடன் விண்ணுக்கு சென்ற கேலக்டிக் 01 விமானம் 75 நிமிட விண்வெளி பயணத்தை முடித்து கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. இது வணிக ரீதியாக விண்வெளி பயணத்தில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இது குறித்த அனுபவங்களை விமானியுடன் இத்தாலி விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

The post மனிதர்கள் வணிக ரீதியாக விண்வெளி பயணம்: விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: