சிதம்பரத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தில்லை அம்மன் மற்றும் தில்லை காளியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா.!

சிதம்பரம்: சிதம்பரத்தில் பழமை வாய்ந்த தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 725 ஆண்டுகளுக்கு முன் கோப்பெருஞ்சிங்கன் என்ற சோழ மன்னரால் கட்டப்பட்டுள்ளது. சிவமும் சக்தியும் ஒன்றே என்ற உண்மையை உணர்த்தும் விதமாக இக்கோவில் தில்லை அம்மன் மற்றும் தில்லை காளியம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளது. இத்தக சிறப்புமிக்க இக்கோவில் சிதில மடைந்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக தற்போது நடைபெற்றது, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 01ம் தேதியிலிருந்து ஆறு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின இன்று 6ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்த உடன் கோ பூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஆச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க தலையில் சுமந்து கோவிலை சுற்றி கோபுர உச்சிக்கு சென்றனர் அங்கு புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தீபாரதனை மற்றும் கருவறையில் உள்ள சுவாமிக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு திபாரதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்,பாதுகாப்பு பணிகளுக்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாரம் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post சிதம்பரத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தில்லை அம்மன் மற்றும் தில்லை காளியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா.! appeared first on Dinakaran.

Related Stories: