சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேரவையில் பேசிய முதல்வர், தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை இளையபெருமாள் பட்டியல் போட்டு சொன்னதை கேட்டு அண்ணல் அவர்களே வியப்படைந்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு அடித்தளமே பெரியவர் இளைபெருமாளின் அறிக்கைதான். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது செல்லும் என்று இளையபெருமாள் அறிக்கையை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்றார்.

The post சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: