சென்னை: போக்குவரத்துத் துறையில் சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு உலக சுற்றுச்சூழல் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்துதல், வளப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக சென்னை மெட்ரோவுக்கு விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உலகளாவிய நிலைத்தன்மை விருதை பெற்றது.