சென்னையில் 2-வது நாளாக 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில்: 107 டிகிரி வரை இருக்கும் என தகவல்

சென்னை: சென்னையில் 2-வது நாளாக 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. நண்பகல் 12 மணியளவில் சென்னையில் வெயிலின் அளவு 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்றைய வெயிலின் தாக்கம் 107 டிகிரி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் கடலோர பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

மே மாதம் முதல் வாரத்தில் மோக்கா புயல் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மோக்கா புயல் நேற்று மியான்மர் பகுதியில் கரையை கடந்தது. இந்த மோக்கா இந்திய பகுதில் உள்ள ஈரப்பதங்களை எடுத்து சென்றது. இதனால் தற்போது தரைக்காற்று வீசத்தொடங்கியுள்ளது. இதனால் சென்னை சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் 40 டிகிரி செல்சியஸ்-க்கு அதிகமாக வெப்பம் காணப்படுகிறது.

வெப்பம் அதிகரிக்கும் போது கடல்காற்று வந்து வெப்பத்தை தணிப்பது வழக்கம், ஆனால் நேற்றும் இன்று கடல்காற்று தாமதமாகவே வருகிறது.

அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு வடமேற்கு திசையில் இருந்து வீசக்கூடிய தரைக்காற்று வீசக்கூடும். அதனால் 18-ம் தேதிவரை வெப்பம் அதிகரித்து காணப்படும். அதன்பிறகு உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

The post சென்னையில் 2-வது நாளாக 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில்: 107 டிகிரி வரை இருக்கும் என தகவல் appeared first on Dinakaran.

Related Stories: