மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஏற்கனவே மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு மாலை வேலையில் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. மணவர்களின் மதிப்பெண்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தவிர மாநகராட்சி பள்ளிகளில் விளையாட்டுப்போட்டிகளுக்கான முக்கியத்துவம் அளித்து பல்வேறு போட்டிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
படிப்புத்திறனை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டத்தன் விளைவாக மாநகராட்சி பள்ளிகளில் இந்த ஆண்டு மொத்தமாக 16,490 மாணவர்கள் சேர்ந்துள்ளன. இன்று பள்ளிகள் திறக்கபட்டுள்ள நிலையில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும் என்பதால் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் அதிகபட்சமாக LKG, UKG-யில் மட்டும் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
The post சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை 2 மடங்கு அதிகரிப்பு..! appeared first on Dinakaran.
