சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழிதவறியதால் பரபரப்பு

திருமலை: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்க நேற்று ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் ஹெலிகாப்டர் வழிதவறி வேறு பாதையில் சென்றது. இதனை கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் (ஏடிசி) பைலட்டிற்கு எச்சரிக்கை செய்தனர். இதனையடுத்து மீண்டும் சரியான பாதையில் சென்று பொதுக்கூட்ட மேடை அருகே சந்திரபாபு பாதுகாப்பாக இறங்கினார். ஏடிசியுடன் பைலட்டிற்கு ஒருங்கிணைப்பு இல்லாமையால் நிர்ணயிக்கப்பட்ட வழியை தவறி பைலட் வேறு திசையில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால்் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழிதவறியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: