18ல் இருந்து 21ஆக மாற்றம்; பெண்கள் திருமண வயதை உயர்த்தும் மசோதா காலாவதியானது


புதுடெல்லி: பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதா 17வது மக்களவை கலைக்கப்பட்டதால் காலாவதியானது. குழந்தை திருமண தடை திருத்த மசோதா 2021, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நிலைக்குழுவானது குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டிப்புக்களை பெற்றது. இந்நிலையில் இந்த மசோதா காலாவதியாகி உள்ளது. 17வது மக்களவை கலைக்கப்பட்டுள்ளதால் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதா காலாவதியாகிவிட்டதாக மக்களவையின் முன்னாள் செயலாளர் பிடிடி ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

The post 18ல் இருந்து 21ஆக மாற்றம்; பெண்கள் திருமண வயதை உயர்த்தும் மசோதா காலாவதியானது appeared first on Dinakaran.

Related Stories: