வழக்கை ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

புதுடெல்லி: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஆந்திரா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,’ திறன் மேம்பாடு தொடர்பான வழக்கில் தன்மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு வரும் வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 மணிநேரம் விசாரணை: ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபுநாயுடுவிடம் நேற்று சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி தனுஞ்சயுடு தலைமையில் அதிகாரிகள் சிறைக்கு சென்று காலை 9.50 மணிக்கு ஊழல் புகாரில் விசாரணையை தொடங்கினர். நேற்று மொத்தம் 8 மணிநேரம் 20 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்றும் விசாரணை தொடர உள்ளது.

The post வழக்கை ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: