சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்ற தகவல் தவறானது என நிர்வாகம் விளக்கம்

டெல்லி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்ற தகவல் தவறானது என நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. தேர்வு முடிவு நாளை வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மை அல்ல என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வுகள், பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளை, கிட்டத்தட்ட 21.8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதுபோன்று, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12-ஆம் வகுப்புத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடத்தப்பட்டது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இந்த சமயத்தில் CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான சரியான தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. அது மட்டுமில்லாமல் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை வாரியம் ஒரே நாளில் வெளியிடுமா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்தது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

CBSE போர்டு முடிவு 2023 இன் போலி அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடவுள்ளது. ஆனால் அதன் அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என்று ஒரு போலி அறிவிப்பு வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என இணையத்தில் வெளியான அறிக்கை போலியானது என CBSE ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளது

The post சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்ற தகவல் தவறானது என நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: