இதையடுத்து விழா நடைபெறும் இடத்திற்கு அருகே வந்த கோபு, அங்கிருந்தவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் சமாதானம் பேசி கோபுவை அனுப்பி வைத்தனர்.
பின்னர், வேனை ஓரமாக நிறுத்திவிட்டு பால் வண்டிக்கு வழி விட்டனர். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வளவந்தாங்கல் சர்ச் தெருவை சேர்ந்த முனியாண்டி(38) என்பவர், அங்குள்ள பள்ளிக்கூடம் அருகில் நின்றிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த கோபு, பாபு, கவுதம், சுகன்ராஜ் உள்ளிட்ட 6 பேர், முனியாண்டியை சரமாரியாக தாக்கி, செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. முனியாண்டியின் அலறல் சத்தத்தை கேட்டு அவருடைய உறவினர்கள் ஓடி வந்து காயமடைந்த முனியாண்டியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதுகுறித்து, முனியாண்டி கொடுத்த புகாரின்பேரில் மானாம்பதி போலீசார், 6 பேர் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, கோபு என்பவரை கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 5 நபர்களை ேதடி வருகின்றனர்.
The post பால் வேனுக்கு வழிவிடுவதில் தகராறு வன்கொடுமை சட்டத்தில் 6 பேர் மீது வழக்குப்பதிவு: ஒருவர் கைது 5 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.
