நம்மாழ்வார் விருதுக்கு 3 பேர் தேர்வு: வேளாண்துறை அறிவிப்பு

சென்னை: சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதுகள் தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த 3 பேருக்கு வழங்கப்படுகிறது என வேளாண் துறை அறிவித்துள்ளது. 2023-24ம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தவாறு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் மூன்று அங்கக விவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான “நம்மாழ்வார் விருதுடன்” பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வழங்க மூன்று விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

அதன்படி முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், சான்றிதழ், பதக்கத்தை தஞ்சாவூர் மாவட்டம், மகர்நோன்பு சாவடியைச் சேர்ந்த கோ.சித்தர், இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம், சான்றிதழ், பதக்கத்தை திருப்பூர் மாவட்டம், பொங்கலூரைச் சேர்ந்த கே.வெ.பழனிச்சாமிக்கு, மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம், சான்றிதழ் மற்றும் பதக்கம் காஞ்சிபுரம் மாவட்டம், அச்சுக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த கு.எழிலனுக்கு வழங்கப்படுகிறது.

The post நம்மாழ்வார் விருதுக்கு 3 பேர் தேர்வு: வேளாண்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: