கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காட்டுத் தீயால் 6,16,000 ஹெக்டேர் காடுகள் எரிந்து சேதம்..!!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காட்டுத் தீயால் சுமார் 6 லட்சத்து 16 ஆயிரம் ஏக்கர் காடுகள் எரிந்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாகாணத்தில் 86 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், அதில் 24 பகுதிகளில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. காட்டுத் தீயால் ஆல்பர்ட்டா முழுவதும் கடும் புகை மூட்டத்துடன், வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது. புகையால் காற்றின் தரம் மோசமாகி உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் தீயணைப்பு பணிகளுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.

The post கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காட்டுத் தீயால் 6,16,000 ஹெக்டேர் காடுகள் எரிந்து சேதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: