இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் பும்ரா, ஹர்ஷித் ராணா நீக்கம்: சாய் சுதர்சன் களமிறங்குவதில் சிக்கல்

இந்தியா-இங்கிலாந்து 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சனுக்கு பீல்டிங்கின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 2-வது போட்டிக்கு முன் முழு உடற்தகுதி பெற்றால் அவர் களமிறங்குவார் என்று கூறப்பபடுகிறது. இந்நிலையில் 2வது போட்டிக்கான இந்திய அணியிலிருந்து இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பர்மிங்காம் சென்ற இந்திய அணியுடன் அவர் பயணிக்கவில்லை. இதனால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்த 2வது போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியில் பும்ரா விளையாடுவதற்காக 2வது போட்டியில் அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

The post இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் பும்ரா, ஹர்ஷித் ராணா நீக்கம்: சாய் சுதர்சன் களமிறங்குவதில் சிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: