அரசு மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு பலன்: ஒன்றிய அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம், ஒன்றிய அரசின் அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் அனுப்பிய உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஒன்றிய அரசின் பதவிகள் மற்றும் பணிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு உட்பட்டு, கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி முதல் குரூப் ‘ஏ’வின் கீழ் நிலை வரை பதவி உயர்வில் இடஒதுக்கீட்டின் பலனை வழங்குவதற்கு பரிசீலிக்கப்படுவார்கள். தகுதியான ஊழியர்கள் 2016 ஜூன் 30 முதல் கருத்தியல் அடிப்படையில் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

பண பயன்கள் பதவி உயர்வுக்கான பதவியின் பொறுப்பை ஏற்கும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும். பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளின் பணிமூப்பு பாதிக்கப்படாத வகையிலும், நிர்வாக சங்கடங்களை தவிர்ப்பதற்காகவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சிறப்பு பணியிடங்கள் உருவாக்கவும் பணியாளர் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இத்தகைய சூப்பர் நியூமரரி பணியிடங்களை உருவாக்குவது மாற்றுத் திறனாளி ஊழியருக்கு தனிப்பட்டதாக இருக்கும். அவருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீட்டின் பலன் கருத்தியல் அடிப்படையில் வழங்கப்படும்.

The post அரசு மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு பலன்: ஒன்றிய அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: