வங்கதேசத்தில் ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு: 9 பேர் உயிரிழப்பு

டாக்கா: வங்கதேசத்தில் நேற்று (ஞாயிற்றுகிழமை) காலைவரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 2,292 பேர் டெங்கு நோயால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது 2023 ஆம் ஆண்டில் ஒரே நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்த நிலையில், டெங்குவால் மேலும் 9பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176-ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 2,292 பேர் டெங்குவால் பாதிக்கபட்டுள்ள நிலையில், 1,064 பேர் டாக்காவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷ் முழுவதும், இதுவரை 7,175 பேர் டெங்குவால் பாதிக்கபட்டுள்ள நிலையில், தலைநகர் டாக்காவில் 4,149 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்த தகவலின் படி, இந்த ஆண்டில், இதுவரை 32,977 பேர் டெங்குவால் பதிக்கபட்டள்ளனர். அதில் 25,626 குணமடைந்து வேடி திரும்பினர்.

வங்கதேசத்தில் 2022 இல் 281 பேரும், 2019 இல் 179 பேரும், டெங்குவால் உயிரிழந்தனர். மேலும், கடந்த ஆண்டு 62,423 பேர் டெங்குவால் பாதிக்கபட்ட நிலையில், 61,971 மட்டுமே குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த ஜனவரி முதல், ஜூலை வரை 109 பேர் டெங்குவால் உயிரிழந்தனர்.

டெங்கு நோய்-2023-ன் மாத வாரியான தரவுகளின்படி, ஜனவரியில் 111 பேர் பாதிக்கபட்டனர், பிப்ரவரியில் 143 பேரும், மார்ச் மாதத்தில் 143 பேர் பாதிக்கபட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்தனர், ஏப்ரலில் 2பேர் உயிரிழந்து 50 பேர் டெங்குவால் பாதிக்கபட்டனர். மே மாதம் 1036 பாதிக்கபட்ட நிலையில் 2 பேர் இறந்தனர். ஜூன் மாதத்தில் மட்டும் 5,956 பேர் டெங்குவால் பாதிக்கபட்டிருந்தனர்.

The post வங்கதேசத்தில் ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு: 9 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: