தெஹ்ரான்: ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அது தொடர்பான வன்முறைகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் பொருளாதார சீரழிவு, அதன் தொடர்ச்சியாக விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக அவதிப்படும் நிலையில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஈரானில் கடந்த 2022ம் ஆண்டு தலைக்கு ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட 22 வயதான மஹ்சா அமினி காவல்நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்பு படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததையடுத்து வன்முறையாக மாறியது.
தற்போது வரை வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் பொருளாதார சீரழிவு, அதன் தொடர்ச்சியாக விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக அவதிப்படும் நிலையில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
போராட்டம் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்து உள்ளது. ஈரானின் ரியால் நாணயத்தின் மதிப்பு வேகமாக சரிந்து ஒரு டாலரின் மதிப்பானது 1.4மில்லியன் ரியால்களாக உள்ளது.
