சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,640க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,830க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271க்கு விற்பனையாகிறது.

தங்கம், வெள்ளி விலை கடந்தாண்டு இறுதியில் அதிரடியாக உயர்ந்து வந்தது. 2ம் தேதி சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 640க்கு விற்பனையானது. 3ம் தேதி விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது, அன்றைய தினம் காலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1,00,160க்கு விற்றது. இந்த விலை குறைவு என்பது சில மணி நேரம் தான் நீடித்தது. தொடர்ந்து மாலையில் மீண்டும் ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 800க்கு விற்பனையானது.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று காலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,680க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,01,440க்கு விற்பனையானது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று காலை அதிகரித்து காணப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும், கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. இந்த அதிரடி விலை உயர்வை தாங்குவதற்குள் பிற்பகலில் தங்கம், வெள்ளி விலை மேலும் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று பிற்பகலில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,760க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 2,080க்கு உயர்ந்தது. தொடர்ந்து தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்தது. வெள்ளியும் நேற்று மாலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.266க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி விலை ரூ.2.66 லட்சத்துக்கு விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலை காலை, மாலை என ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.9 ஆயிரம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை ஏறுமுகத்தையே கண்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,02,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,830க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271க்கு விற்பனையாகிறது. காலையில் தற்போது தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் மாலையிலும் உயர்த்துவிடுமோ என நகை வாங்குவோர் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: