மின்சாரம் அதிகம் சேமிக்கும் அரசு அலுவலகங்களுக்கு விருது: மின்வாரியம் தகவல்

சென்னை: அதிகளவில் மின்சாரத்தை சேமிக்கும் அரசு அலுவலகங்களுக்கு சிறந்த எரிசக்தி சேமிப்புக்கான விருது வழங்க பரிந்துரை செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட அறிக்கை:

எரிசக்தி சேமிப்பின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் கருதி மின் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய சென்னை பகுதிக்குட்பட்ட அரசுத்துறை அலுவலகங்களான சென்னை உயர் நீதிமன்றம், தலைமை செயலகம், அரசு மருத்துவமனைகள் (ராஜிவ்காந்தி, ராயப்பேட்டை, ஓமந்தூரார், கிங், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகள்), சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், காவல் துறை ஆணையர் அலுவலகம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பள்ளிக் கல்வித் துறை அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம், தமிழ்நாடு தகவல் ஆணையம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகிய அரசு அலுவலகங்களில் உள்ள மின் உபகரணங்களில் மின் ஆற்றல் தணிக்கை செய்யப்படும்.

தணிக்கை அறிக்கையின்படி மின் உபகரணங்களை உபயோகித்து, கிடைக்கும் மின்சேமிப்பை, அதாவது மின் ஆற்றல் தணிக்கைக்கு முன்னர், பின்னர் மின் பயனீட்டு அளவை கணக்கீடு செய்து உரிய ஆவணங்களுடன் தலைமை பொறியாளர், தொழில்துறை ஒருங்கிணைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மின்தேவை தரப்பு மேலாண்மை அலுவலகம், 144 அண்ணா சாலை, என்.பி.கே.ஆர்.ஆர் மாளிகை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், சென்னை-2 அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அதிகளவு மின் ஆற்றல் சேமிப்பை பெறுகின்ற மின் பயனீட்டாளருக்கு சிறந்த எரிசக்தி சேமிப்புக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்படும்.

The post மின்சாரம் அதிகம் சேமிக்கும் அரசு அலுவலகங்களுக்கு விருது: மின்வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: