ஓட்டேரி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் ஏலம்: காவல் ஆணையரகம் தகவல்

கூடுவாஞ்சேரி: தாம்தாம்பரம் மாநகர காவல் ஆணையராகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம், கூடுவாஞ்சேரி சரகம், ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓட்டேரி காவல் நிலையத்தில் பகிரங்க ஏலம் மூலம் கழிவு வாகனங்களாக விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும், இந்த ஏலத்தில் கலந்துகொள்ள உள்ள ஏலதாரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவு எண் ஆதாரங்களுடன் டி7 ஓட்டேரி காவல் நிலையத்தில் 24.6.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் முன்பதிவு கட்டணம் ரூ.500 செலுத்தி தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்த ஏலதாரர்கள், ஏலக்குழுவினர் முன்னிலையில், 4.7.2023 அன்று காலை 10 மணிக்கு டி7 ஓட்டேரி காவல் நிலையத்தில் நடைபெறும் ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.

மேலும், பதிவு செய்த நபர்கள் மட்டுமே பகிரங்க ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்திற்கான ஏலத்தொகையை அன்றய தினமே 100 சதவீதம் செலுத்த வேண்டும். அதற்கான ஜிஎஸ்டி கட்டணத்தை செலுத்திய பின்பு விற்பனை ஆணை வழங்கப்பட்டு ஏலம் எடுத்த வாகனங்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஓட்டேரி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் ஏலம்: காவல் ஆணையரகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: