சட்டமன்ற தேர்தலில் தனது பங்களிப்பு அதிகமாக இருக்கும்: சொல்கிறார் சசிகலா

திருத்துறைப்பூண்டி: மக்கள் தன்னுடன் உள்ளதால் வரும் சட்டமன்ற தேர்தலில் தனது பங்கு மிக மிக அதிகமாக இருக்கும் என சசிகலா தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புகழ் பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயில் பந்த கால் முகூர்த்தம் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. 20ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை இரவு 63 ஆண்டுகளுக்கு பிறகு ஆலய கருப்பர் ஆபிஷேக ஆராதனை மற்றும் திருவீதியுலா நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று உபயதாரர் மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை தலைவர் திவாகரன் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். மாற்றம் கண்டிப்பாக இருக்கும். ஜெயலலிதா கொடுத்த மக்களாட்சி மீண்டும் கொண்டு வருவோம். ஜெயலலிதா ஆட்சியின்போது மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். மக்கள் தன்னுடன் உள்ளதால் வரும் சட்டமன்ற தேர்தலில் தனது பங்கு மிக மிக அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சட்டமன்ற தேர்தலில் தனது பங்களிப்பு அதிகமாக இருக்கும்: சொல்கிறார் சசிகலா appeared first on Dinakaran.

Related Stories: