அசாம் பெண் எஸ்ஐ பலி சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

கவுஹாத்தி: அசாம் பெண் காவல் துணைஆய்வாளர் சாலை விபத்தில் பலியானது தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரிக்கும் என அஸ்ஸாம் காவல்துறை தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் காவல் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜன்மொய் ரபா பெண் சிங்கம் என்றழைக்கப்பட்டவர். அசாம் மாநிலம் மோரிகோலாங் சோதனை சாவடியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 17ம் தேதி தனது காரில் நகோன் மாவட்டத்துக்கு சென்று கொண்டிருந்தபோது லாரி மோதி பலியானார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் ஜன்மொய் ரபாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து அவரது மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற அசாம் காவல்துறை பரிந்துரைத்துள்ளது.

The post அசாம் பெண் எஸ்ஐ பலி சிபிஐ விசாரணைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: