கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தாம்பரம் மாநகராட்சியில் விண்ணப்பம் சரிபார்ப்பு பணி: ஆணையர் நேரில் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற இரு கட்டங்களாக நடந்த சிறப்பு முகாம்கள் மூலமாக 1,12,045 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்படி நாட்களில் விண்ணப்பம் பதிவு செய்ய வர இயலாத நபர்களுக்கு சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடந்தது.

இதில் 4737 பேர் விண்ணப்பித்ததோடு சேர்த்து மொத்தமாக 1,16,782 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் நேற்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், அனகாபுத்தூர் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். விண்ணப்பங்களை சரி பார்த்ததுடன், பணியில் இருந்த ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தாம்பரம் மாநகராட்சியில் விண்ணப்பம் சரிபார்ப்பு பணி: ஆணையர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: