முக்கூடலில் தசரா விழாவையொட்டி முருகன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு


பாப்பாக்குடி: முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயிலில் இந்து நாடார் சமுதாயம் சார்பில் தசரா விழா கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நான்காம் நாளான நேற்று முக்கூடல் நாடார் இளைஞர் இயக்கம் சார்பில் முத்துமாலை அம்மன், வேல் மற்றும் சேவல் உடன் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை இந்து நாடார் சமுதாய தலைவர் பொன்னரசு, செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் விஜய் சேகர் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

The post முக்கூடலில் தசரா விழாவையொட்டி முருகன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு appeared first on Dinakaran.

Related Stories: