நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பு

சென்னை: மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

தொகுதிப் பங்கீட்டுக் குழு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகத்தின் சார்பில் கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது. கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் குழுவில் உள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது. நத்தம் விசுவநாதன், C. பொன்னையன், பொள்ளாச்சி V. ஜெயராமன், D. ஜெயக்குமார்,C.Ve. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, O.S. மணியன், R.B. உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரக் குழு
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது. மு. தம்பிதுரை, K.A.செங்கோட்டையன், என். தளவாய்சுந்தரம், செல்லூர் K.ராஜூ, ப. தனபால், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

The post நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: