எதிர்வரும் 2025-26ம் ஆண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையானது ஐந்தாவது முறையாக வரும் மார்ச்-15ம் தேதி சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் பொருட்டு, இந்த நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய, பிரத்தியேகமாக உழவர் செயலியில் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது, மேலும் tnagribudget2025@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் வேளாண் நிதிநிலையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களைப் தெரிவிக்கலாம். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்துகளை உழவர் செயலி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
