இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ‘ஆடலாம் ஆந்திரா’ போட்டிகள் வரும் 15ம் தேதி தொடங்குகிறது

*திருப்பதி, சித்தூரில் போஸ்டர் வெளியீட்டு விழா

திருப்பதி : மாநிலத்தில் இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் வருகிற 15ம்தேதி ‘ஆடலாம் ஆந்திரா’ என்ற போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான போஸ்டர்கள் திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் வெளியிடப்பட்டது. திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் ‘ஆடலாம் ஆந்திரா’(ஆடுகுண்டாம் ஆந்திரா) போஸ்டர் வெளியீடு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், இணை கலெக்டர் பாலாஜி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசியதாவது:

ஆந்திர மாநிலத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை விளையாட்டை ஊக்குவிப்பதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதற்கும், அவர்களுக்கு நல்ல பழக்கங்களை கடைப்பிடிப்பதற்கும் வருகிற 15ம்தேதி முதல் பிப்ரவரி 3ம்தேதி வரை விளையாட்டு போட்டிகள் மாநில அரசு சார்பில் நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட், கோகோ, கபடி, வாலிபால், பேட்மிட்டன் உள்ளிட்ட 5 போட்டிகள் நடத்தப்படுகிறது. திருப்பதி மாவட்டத்தில் உள்ள 691 கிராம வார்டு பகுதிகளில் இந்த விளையாட்டு போட்டிகள் முதலில் கிராமம்,வார்டு நிலை போட்டிகளில் வென்ற அணி மண்டல நிலைக்கு தேர்ந்தெடுக்கப்படும்.

மண்டல அளவில் வென்ற குழு தொகுதி நிலை மற்றும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர், மாநில அளவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். பண பரிசுகளை வெல்வது தொகுதி நிலை, மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வழங்கப்படும்.

இப்போட்டிகளை நிர்வகிக்க அரசாங்கமும் விளையாட்டுகளில் தேவையான அனைத்து ஏற்பாடுகள் அமைத்து வருகிறது. இப்போட்டிகளை நிர்வகிப்பதற்கான விளையாட்டு பொருட்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒப்படைக்கப்பட்டன. போட்டிகளுக்கு தேவையான மைதானம் மற்றும் அரங்கங்களை தயாரிப்பது மாவட்டத்தில் நிறைவடைந்துள்ளது. கிராம செயலகம், வார்டு செயலக நிலைகளில் 10 தன்னார்வலர்கள் இந்த 5 விளையாட்டுகளில் போட்டி விதிகளில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.

இதில், பங்குபெற 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் அருகில் உள்ள வார்டு கிராம செயலகத்தில் பதிவு செய்யலாம். மேலும், https://aadudamandhra.ap.gov.in/login வலைத்தளத்திலும் பதிவு செய்யலாம். இதனை இளைஞர்கள் சிறந்த வாய்ப்பாக கருதி தங்களது தனித்திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

சித்தூர்: சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ‘ஆடலாம் ஆந்திரா’(ஆடுகுண்டாம் ஆந்திரா) போஸ்டர் வெளியீடு விழா நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் மோகன் தாலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசியதாவது:

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் கடந்த வாரம் ‘ஆடலாம் ஆந்திரா’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தலாம். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதம் மூலம் கிராமப்புறங்களில் இருந்து வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து மண்டல அளவில் போட்டி நடத்தப்படும்.

மண்டல அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டி நடத்தப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவில் போட்டி நடைபெறும். ஆகவே, விருப்பமுள்ளவர்கள் அடுத்த மாதம் 10ம்தேதிக்குள் அந்தந்த மண்டலங்களில் உள்ள விளையாட்டு துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதேபோல், ஆன்லைன் மூலமும் தங்களுக்கு பிடித்த விளையாட்டை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அடுத்த மாதம் 15ம்தேதி முதல் பஞ்சாயத்து அளவில் போட்டிகள் நடத்தப்படும். ஜனவரி முதல் வாரத்தில் மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறும். ஜனவரி 20ம்தேதி மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படும். ஆகவே, விருப்பமுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விளையாட்டு துறையை ஊக்கப்படுத்த முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவ்வாறு, அவர் பேசினார். அப்போது டிஆர்ஓ ராஜசேகர் உள்பட ஏராளமான அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

The post இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ‘ஆடலாம் ஆந்திரா’ போட்டிகள் வரும் 15ம் தேதி தொடங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: