ராணுவத்தில் சேர முடியாததால் விரக்தி: பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட ஆக்ரா இளைஞர்!

ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் ஒருவர் தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேலையாக ஒளிபரப்பியபோதும் அதை பார்த்துக்கொண்டிருந்த 2,750 பேரில் ஒருவர் கூட போலீசுக்கு தகவல் கொடுத்து தற்கொலையை தடுக்க முயற்சிக்கவில்லை என்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ்.சி. பட்டதாரியான 24 வயதான முன்னா குமார், சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கை தனது முன் மாதிரியாகக் கொண்டிருந்தார். இவர் இந்திய ராணுவத்தில் சேர விரும்பியதாகவும், அதற்காக நீண்ட நாட்களாக முயற்சித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே 5 முறை ராணுவத்தில் சேர்வதற்கான தேர்வை எழுதி தோற்றுப்போன அவர், மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பேஸ்புக் நேரலையில் தோன்றி கூறியுள்ளார். சுமார் 1 நிமிடம் 09 நொடிகளுக்கு ஒளிபரப்பான அந்த நேரலை வீடியோவை 2,750 பேர் பார்த்தபோதும், ஒருவர் கூட அவர் தற்கொலையை தடுக்க போலீசாருக்கு தகவல் கூட தெரிவிக்கவில்லை. தற்கொலைக்கு பின்னர் அவரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 6 பக்க கடிதத்தில் ராணுவத்தில் பணிக்கு சேர இயலாமல், தன் பெற்றோர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியதால் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: