எச்.ஐ.வி விழிப்புணர்வு விழாவில் நோயாளி தீக்குளிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் சர்வதேச எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எய்ட்ஸ் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன்,  சுகாதார துணை இணை இயக்குனர், துணை இயக்குனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் எச்.ஐ.வி தொற்றால் பாதித்த ஒருவர் திடீரென தனக்கு தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது, உடனே விரைந்து வந்த மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநர் டாக்டர் கவுரிசங்கர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் காப்பாற்றி விசாரித்தனர்.

அதில் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சாலமன் தனது 3 மகன்களுடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் 4 குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் வீடு வழியாக நடக்க கூடாது என தகராறு செய்து வருகின்றனர். இதனால் வேறு வழியின்றி கால்வாயை சுற்றி சென்று வருவதாகவும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. என கூறப்படுகிறது. இதனால், எனது குடும்பத்தினருடன் எங்கும் செல்ல முடியாததால் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து அனுப்பினர்.

Related Stories: