கடலூர், புதுவை துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர், டிச. 2: கடலூர், புதுவை துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த வாரம் நிவர் புயலாக உருமாறி புதுவை-மரக்காணம் இடையே கரையை கடந்தது. இந்நிலையில் கன்னியாகுமரிக்கு வடகிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது .இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில்  புயல் எச்சரிக்கை தொடர்பான ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று முன்தினம் ஏற்றப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காற்றின் வேகம் மற்றும் அலைகளின் உயரம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையில் 24 மணி நேரத்தில் புயலாக மாறி திருகோணமலை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகப் பகுதியில் கடக்கக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை தொடர் ந்து கடலூர் மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: