வேதாரண்யத்தில் கடல் சீற்றம் தணிந்ததால் இயல்பு நிலைக்கு திரும்பும் கடற்கரை கிராமமக்கள்

வேதாரண்யம், நவ.27: வேதாரண்யத்தில் கடல் சீற்றம் தணிந்ததால் பொதுமக்கள் மெல்ல மெல்லஇயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். நிவர் புயல் கரை கடந்தது நிலையில் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ் பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மாதேவி உள்ளி ட்ட 10க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் தணிந்து உள்ளது. கடந்த 2 நாளாக புயல் காரணமாக கடல் நீர் சுமார் 50 மீட்டர் தூரம் வெளியில் வந்த நிலையில் தற்போது மீண்டும் கடல் உள்வாங்கி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஒரு சில மீனவ கிராமங்களில் மீனவர்கள் கரை வலையை பயன்படுத்தி மீன் இறால் பிடித்து வருகின்றனர்.

நேற்று 2-வது நாளாக வேதாரண்யம் தாலுகாவில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. புயல் முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதி, மற்றும் கூரை வீட்டில் உள்ளவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் புயல் கரையை கடந்ததால் வேதாரண்யத்தில் 12 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 3,300 பேரும், ஊராட்சி பகுதிகளில் 99 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 14,000 பேரும் நேற்று காலை தங்கள் வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். தற்போது வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக புயலின் அச்சத்தில் இருந்த மக்கள் தற்போது அச்சம் நீங்கி இயல்பு நிலைக்கு மெல்லதிரும்பி கொண்டு உள்ளனர். கடந்த 12 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி போய் மீனவர்கள் உள்ளனர்.

தற்போது கடல் சீற்றம் தணிந்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் மீன்துறை மறு அறிவிப்பு செய்து உடன் மீன்பிடிக்கச் செல்வோம் என மீனவர்கள் தெரிவித்தனர். மானாவாரி பகுதியான வேதாரண்யம் தாலுகாவில் சுமார் 10,000 ஹெக்டரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஓரளவு மழையில் பயிர்கள் வளர்ந்த நிலையில் நிவர் புயல் உருவானதால் மழை பெய்து தங்கள் வயல்களில் தண்ணீர் விழுந்துவிடுமென நம்பிய விவசாயிகள் மழை பெய்யாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: