பொன்னமராவதியில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொன்னமராவதி, நவ.23: பொன்னமராவதி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, சிதம்பரம்,மதுரை, திருச்சி,ஈரோடு,திருப்பூர், காரைக்குடி, ராமேஸ்வரம், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பத்தூர், திருமயம், சடையம்பட்டி, பாலக்குறிச்சி, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றது. ஆனால் இரவு நேரத்தில் 10 மணிக்கு மேல் எந்த ஊருக்கு பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொன்னமராவதியில் இருந்து ஆலவயல், பாலகுறிச்சி மார்க்கமாக இரவு 9 மணிக்கு மேல் பஸ் இல்லை.

திருப்பத்தூருக்கு இரவு 10 மணிக்கு தனியார் பேருந்து உள்ளது. இரவு 10 மணிக்கு மேல் பஸ்கள் கிடையாது. புதுக்கோட்டைக்கு 9.30 மணிக்கு மேல் பேருந்துகள் இல்லை. பல்வேறு பகுதியில் உள்ளவர்கள் பொன்னமராவதியில் இருந்து செல்வதற்கு 10 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லாததால் ஆட்டோ மற்றும் கார்களில் மட்டுமே தங்களது ஊருக்கு சென்று வரவேண்டிய நிலையுள்ளது. என்னே இரவு 10 மணிக்கு மேல் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் இருந்து கொப்பனாபட்டி, ஆலவயல், பாலகுறிச்சி வழியாக திருச்சிக்கும், இதேபோல புதுக்கோட்டை, துவரங்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: