பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்

பெரம்பலூர்,நவ.23: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட் டுள்ள வாக்குச்சாவடி மற் றும் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளி யில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஆகியவற்றில் நேற்று நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களை நேற்று (22ம்தேதி) கலெக்டர் வெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தியத் தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த 16ம்தெதி வெளி யிடப்பட்டு கலெக்டர் அலு வலகம், நகராட்சி அலுவ லகம், கோட்டாட்சியர் அலு வலகம், வட்டாட்சியர் அலு வலகம் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்க ளிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது.

இந்தியத் தேர் தல் ஆணையத்தின் உத் தரவின்படி 2021 ஜனவரி 1ம்தேதியன்று 18வயது பூர் த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களையும் தகுதியுள்ள வாக்காளராக கருதி அவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர் த்திடவும், வரைவு வாக்கா ளர் பட்டியலில் பெயர் திரு த்தம், முகவரி திருத்தம் மற் றும் பெயர் நீக்கம் போன் றவற்றினை மேற்கொள்ளும்பொருட்டு நவம்பர் 16ம் தேதிமுதல் டிசம்பர் 15ம் தே திவரை சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சிறப்பு முகாம் கள் கடந்த 21,22 சனி, ஞாயி று ஆகிய 2 நாட்கள் நடை பெற்றன. நேற்று பெரம்ப லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட் டுள்ள வாக்குச்சாவடி மற் றும் தந்தை ஹேன்ஸ் ரோ வர் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு ச்சாவடிகள் ஆகியவற்றில் கலெக்டர்  வெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: