பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்குவதில் அனைத்துத்துறை ஜெயங்கொண்டத்தில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

ஜெயங்கொண்டம், மே. 3: ஜெயங்கொண்டத்தில் பழைய இரும்பு குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. ஜெயங்கொண்டம் இந்திரா நகரில் பழைய இரும்பு குடோன் நடத்தி வருபவர் ராமமூர்த்தி மகன் பால விக்னேஷ். இவரது குடோனில் நேற்று மாலை ஒதுக்குப்புறமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தேவையற்ற பழைய பிளாஸ்டிக் பொருட்கள் பாட்டில்கள் உள்ளிட்டவற்றில் திடீரென தீப்பிடித்தது. தீ மள மள என பரவி வானளாவிய புகை மூட்டம் ஏற்பட்டது. அருகே உள்ள வீடுகளில் புகை உள்ளே சென்றதால் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அப் பகுதியில் இருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பாளர்கள் காமராஜ், மணிகண்டன், ராஜா, மணிவண்ணன், செந்தில்குமார், பிராங்கிளின் ராஜ் ஆகியோர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர். தீ எரியும் போது ஏற்பட்ட புகைமூட்டத்தால் ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்குவதில் அனைத்துத்துறை ஜெயங்கொண்டத்தில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: