தரம் உயர்த்தியும் டாக்டர்கள் எண்ணிக்கை இல்லை கலெக்டர் கண்டுகொள்வாரா?

காரைக்குடி, நவ.22:  காரைக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் டாக்டர்கள் எண்ணிக்கை மற்றும் அதியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டாமல் உள்ளது. சிவகங்கையில் மருத்துவ கல்லூரி துவங்கப்பட்ட பின்னர் அங்கிருந்த மாவட்ட தலைமை மருத்துவமனை அடுத்த கட்ட பெரிய நகரமான காரைக்குடிக்கு மாற்றப்பட்டது. காரைக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் பெயரளவில் மட்டும் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 44 டாக்டர்கள் தேவைப்படும் நிலையில் 24 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை, தோல் டாக்டர் இல்லாத நிலையே தொடர்கிறது. தமிழ கமக்கள் மன்ற தலைவர் ராசகுமார் கூறுகையில், தலைமை மருத்துவமனை அறிவிப்போடு உள்ளது. போதுமான வசதிகள் இல்லை. பெயரளவில் தலைமை மருத்துவமனையாகவும், பிரசவம் மட்டும் பார்க்கும் ஆரம்ப சுகாதர நிலையம் போல் செயல்படுகிறது. போதிய டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் இல்லை. பராமரிப்பு, சுகாதார பணியாளர்கள் போதிய அளவில் இல்லாததால் முறையாக சுத்தம் இல்லாமல் உள்ளது. அவசர சிகிச்சை பிரிவு இல்லாததால் சிறிய அளவில் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

மேல் சிகிச்சைக்கு என மதுரைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பலர் வழியில் உயிர் இழப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. அவசர சிகிக்சை பிரிவு துவங்க வேண்டும் என பல முறை போராடியும் பயன் இல்லை. உள் மற்றும் வெளி நோயாளிகள், நோயாளிகளுடன் உடன் இருப்பவர்களுக்கு உணவு வசதிக்கு என அம்மா மெஸ் துவங்க வேண்டும். 24 மணி நேரம் செயல்படக் கூடிய உரிய டாக்டர்கள் பணியாளர்களுடன் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுத்த வேண்டும் என முதல்வர் தனிபிரிவு, மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: