பஸ் இயக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

ஈரோடு, நவ.22: பஸ் இயக்கக்கோரி கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. கொடுமுடி அருகே அரசம்பாளையத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் கதிரவனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘கொடுமுடி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு, கரூர் செல்லும் பஸ்கள், கொடுமுடி, சாலைப்புதுார் வழியாகவும், கொடுமுடி, கணபதிபாளையம், ஒத்தக்கடை வழியாகவும், கொடுமுடி, ஊஞ்சலுார் வழியாக மட்டும் இயங்குகிறது. கொடுமுடி, கணபதிபாளையம், ஒத்தக்கடை இடையே 200 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே வீடுகள் உள்ளன. மீதமுள்ள பகுதி முழுமையாக நஞ்சை நிலமாக உள்ளது. அப்பகுதியில் வீடுகள் அமையவும் வாய்ப்பில்லை.

இதற்கு மாற்றாக கொடுமுடி, தளுவம்பாளையம், அரசம்பாளையம், கொளத்துப்பாளையம், அரிசன தெரு, பள்ளக்காட்டூர், மூர்த்திபாளையம் ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில் பஸ்களை இயக்க வேண்டும். தற்போது, கொடுமுடி பஸ் ஸ்டாண்டில் இருந்து, இப்பகுதிகளுக்கு ஆட்டோ, டூ வீலர்களில் மட்டுமே செல்ல வேண்டி உள்ளது. இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கின்றனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: