விருதுநகர் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு

விருதுநகர், நவ. 20:  விருதுநகர் அதிமுக சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், விருதுநகர் தொகுதியில் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும். விருதுநகரில் மருத்துவக்கல்லூரி, அருப்புக்கோட்டை, சாத்தூர்,சிவகாசி, திருவில்லிபுத்தூரில் அரசு கல்லூரி, சீவலப்பேரி, வல்லநாடு, முக்கூடல், கொண்டாநகர கூட்டுக்குடிநீர் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகருக்கு ரூ.440 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் பணிகள் நடக்கிறது. பல் மருத்துவக்கல்லூரி பணிகள் துவங்க உள்ளது என்றார். இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன், எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் கலாநிதி, ஒன்றிய தலைவர் சுமதி, தொழிலதிபர் கோலகும் எம்.தங்கராஜ், நகர செயலாளர் முகம்மது நெய்னார், மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன்,

 கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மேற்கு ஒன்றிய பொருளாளர் ராஜசேகர், மதுரை விமான நிலைய  ஆலோசனைக்குழு உறுப்பினர் கதிரவன், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் பாலகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் நாகராஜன், இலக்கிய அணி செயலாளர் மச்சராஜா உள்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர் (வடக்கு) சுப்புராஜ், வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர் (தெற்கு) சேதுவர்மன், பேரூர் செயலாளர்கள் வைகுண்டமூர்த்தி, மாரிமுத்து, சங்கரமூர்த்தி, ஜெயகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: