கடையநல்லூர், நவ.20: கடையநல்லூர் ஒன்றியம் இடைகாலில் இன்று (20ம் தேதி) ஒன்றிய திமுக பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. மாநில அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.இடைகால் யாதவர் சமுதாய கூடத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் டாக்டர் செல்லத்துரை தலைமை வகிக்கிறார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் துரை முன்னிலை வகிக்கின்றனர். மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல்காதர் வரவேற்கிறார்.