தங்கமயில் ஜூவல்லரியில் நாளை தீபாவளி சிறப்பு விற்பனை இன்று தந்தேராஸ் பண்டிகை: தங்கம் வாங்க உகந்த நாள்

மதுரை, நவ.13: தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் “தந்தேராஸ்” பண்டிகை பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. தந்தேராஸ் என்கிற வார்த்தை இரு சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. ‘தன்’ என்றால் செல்வம் என்று பொருள். இந்து நாட்காட்டியின் படி ‘தேராஸ்’ என்பதற்கு 13வது நாள் என்று பொருள். அதன்படி, இந்தாண்டு நவம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை தந்தேராஸ் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மாலையில் லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. மேலும் வீடுகளில் விளக்குகள் வைத்து வணங்குகின்றனர்.

இந்து பாரம்பரியத்தின்படி, புதிய கொள்முதல், குறிப்பாக தங்கம் அல்லது வெள்ளி மற்றும் புதிய பாத்திரங்கள் வாங்குவதற்கு தந்தேராஸ் மிகவும் நல்ல நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் அது பல்கிப் பெருகும் நம்பிக்கை இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களால் அட்சய திரிதியை, ஆடிப்பெருக்கு நன்னாட்களில் யாராலும் தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்க முடியவில்லை, இந்த தந்தேராஸ் நாளில் தங்கம், வெள்ளி வாங்கலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக தங்கமயில் ஜூவல்லரியில் தீபாவளி நாளில் சிறப்பு விற்பனை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இத்தகவலை தங்கமயில் ஜூவல்லரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: