விழுப்புரம் வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை அனைத்து தேர்தலிலும் வாக்குச்சீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் முதல்வர் நாராயணசாமி பேட்டி

காரைக்கால், நவ. 12: எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் வாக்குச்சீட்டு முறையை கடைபிடிக்க வேண்டுமென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலம், காரைக்காலுக்கு சென்ற முதல்வர் நாராயணசாமி விழுதியூர் சந்தவெளி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர் கமலக்கண்ணனுடன் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார். இதில் எம்எல்ஏ கீதா ஆனந்தன், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா மற்றும் அறங்காவல் துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்வர் நாராயணசாமி கூறுகையில், நேற்றைய தினம் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்கள் 14 பேர் விடுவிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசியதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் வாக்குச்சீட்டு முறை களையே கடைபிடிக்க வேண்டும். பீகாரில் மோடி அலை வீசினால், ராஷ்டிரிய ஜனதாதளம் ஏன் அதிக இடங்களை பிடித்துள்ளது?. மோடி அலை என்பது ஒரு மாயை. பீகார் தேர்தலில் மோடி அலை என்பதே இல்லை.

 பாஜக நடத்தும் வேல் யாத்திரை மக்கள் மத்தியில் மதக் கலவரத்தை ஏற்படுத்தவே நடத்தப்படுகிறது. இந்த ரத யாத்திரையில் பாஜகவினர் மட்டுமே செல்கின்றனர். அரசியல் கட்சி எதற்கு வேல் யாத்திரை நடத்த வேண்டும்?. புதுச்சேரி மாநிலத்தில் பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை, என்றார். டிஐஜி அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: