2015 கனமழை வெள்ளத்தால் சேதமடைந்த இரும்புலிச்சேரி பாலாற்று பாலம்: கலெக்டர் ஆய்வு

திருக்கழுகுன்றம்: கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையால் சேதமடைந்த இரும்புலிச்சேரி பாலாற்று பாலத்தை கலெக்டர் ஜான்லூயிஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருக்கழுக்குன்றம் ஒன்றியம்  இரும்புலிச்சேரியில் பாலாற்று பாலம் அமைந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பெய்த கன மழையால், இந்த பாலம் சேதமடைந்து, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் இரும்புலிச்சேரி, அட்டவட்டம், சாமியார் மடம்  உள்பட பல்வேறு கிராம மக்கள் போக்குவரத்து வசதின்றி தவிக்கின்றனர். இதையடுத்து, அந்த பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் அமைக்க  வேண்டும் என்று  பொது மக்கள்  கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர்  ஜான்லூயிஸ், சேதமடைந்த பாலாற்று பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், வனத்துறைக்கு சொந்தமான திருக்கழுக்குன்றம் அடுத்த பொன்பதிர்கூடம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையையும்ஆய்வு செய்தார் .வனத்துறையினரின் தடையால் பல ஆண்டுகளாக இச்சாலை போடப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வின்போது, திருக்கழுக்குன்றம் தாசில்தார் பர்வதம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆறுமுகம், துணை செயலாளர் எஸ்வந்த்ராவ், மாவட்ட பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், முன்னாள் எம்.பி மரகதம் குமரவேல், முன்னாள் எம்எல்ஏ ராஜி, ஒன்றிய செயலாளர்கள் விஜயரங்கன், செல்வம் உட்பட பலர் இருந்தனர்.

Related Stories: