காங்கிரஸ் நிர்வாகி இல்ல விழா அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு

திருச்சி, நவ.1: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் 11வது வார்டு மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணகுமாரி கணபதி, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறியாளர் பிரிவு தலைவர் இன்ஜினியர் கணபதி தம்பதியின் மகள் குந்தவை என்ற சஞ்சனாவுக்கு துடையூரில் உள்ள திருமண மண்டபத்தில் பூப்புனித நீராட்டுவிழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதன், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க மாநில அமைப்பாளர் செங்கம் குமார், மகிளா காங்கிரஸ் மாநில தலைவி சுதா, பொறியாளர் பிரிவு மாநில தலைவர் விஜயகுமார், பொறியாளர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணகாந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் சரவணபாண்டியன், முன்னாள் திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் இணைச்செயலாளருமான செவந்திலிங்கம், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கலை மற்றும் காங்கிரஸ் மாவட்ட, வட்டார நிர்வாகிகள், திமுக, மதிமுக உள்ளிட்ட தோழமை கட்சி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு சஞ்சனாவுக்கு ஆசி வழங்கினர்.

Related Stories:

>