நீடாமங்கலத்தில் 1 மணிநேரம் ரயில்வே கேட் மூடல் சாலையில் வாகனங்கள் அணிவகுப்பு

நீடாமங்கலம், அக்.30: நீடாமங்கலத்தில் நேற்று மாலை தொடர்ந்து ஒருமணிநேரம் ரயில்வேகேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திரூவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சரக்கு ரயில் இணைப்பு பணிக்காக நேற்று மாலை சுமார் 7.10 மணியளவில் ரயில்வேகேட் மூடப்பட்டது. சரக்கு ரயிலில் என்ஜின் இணைப்பு மற்றும் வேகன்கள் இணைப்பு பணியும் நடந்தது. இதனால் தொடர்ச்சியாக சுமார் ஒருமணி நேரம் ரயில்வேகேட் மூடப்பட்டது. இதனால் நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. ரயில்வேகேட் மூடப்பட்டதால் சாலையின் இருபுறமும் பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து வரிசையாக நின்றது. பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். பின்னர் இரவு சுமார் 8 மணிக்கு மேல் ரயில்வேகேட் திறக்கப்பட்டு நெடுஞ்சாலையில் வாகனங்கள் வரிசையாக புறப்பட்டு சென்றன. ஒருமணிநேரம் ரயில்வேகேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையைபோக்கிட நீடாமங்கலம் மேம்பாலம் திட்டம், இருவழிச்சாலைத் திட்டம் ஆகியவற்றை விரைவுபடுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: