சுரண்டை காமராஜர் அரசு கல்லூரிக்கு ரூ.88 லட்சம் கல்வி உபகரணங்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ வழங்கினார்

சுரண்டை, அக்.23: சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.88 லட்சம் கல்வி உபகரணங்களை செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ வழங்கினார். சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி தேசிய தரவரிசை சான்றிதழ் பெறும் பொருட்டு கல்லூரி கல்வித்துறை உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மரத்தளவாடங்கள் மற்றும் கணினி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாஸ்கரன் தலைமை வகித்தார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி தலைவர் தங்கையா முன்னிலை வகித்தார். கணிதத்துறை தலைவர் ஜெயா வரவேற்றார். தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ரூ.88 லட்சம் மதிப்புள்ள மரத்தளவாடங்கள் மற்றும் கணினி உபகரணங்களை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்.

தொடர்ந்து சுரண்டை கல்லூரி வளர்ச்சிக்கு இதுவரை சுமார் ரூ.9 கோடிக்கு மேல் நிதியைப் பெற்று தந்த எம்எல்ஏவிற்கு கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் இந்து நாடார் மகமை கமிட்டி நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன், என்எச்எம் பாண்டியன், எபன் குணசீலன், ஜவஹர் தங்கம், ராஜேஷ், கீழச்சுரண்டை மாரியப்பன், கோபால், தேனம்மாள் தங்கராஜ், கோட்டூர்சாமி, முருகையா, சங்கர், கீதா, சங்கர், சந்திரன், மாரிக்குமார், மணிக்குட்டி, மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் பழனிச்செல்வம் நன்றி கூறினார்.

Related Stories: