இணைப்பு சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி, அக்.23: திருச்சி மாவட்டத்தில் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் பெற விண்ணப்பிக்கலாம். இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற விரும்புவோர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், கல்வி பயில்பவராக தொழில் செய்பவராக, சுய தொழில் புரிபவராகவும், இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டவராகவும், இரண்டு கைகள் நல்ல நிலையில் உள்ளவர்களாகவும் மற்றும் வாகனத்தை நன்றாக இயக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக பேட்டரியால் இயங்கும் வாகனம் மற்றும் வாகனம் வாங்க மானியம் பெறாதவர்களாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியராக இருத்தல் கூடாது. தகுதியுடையோர் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும்), ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>