கொரோனாவின் வேகம் குறைகிறது 3வது நாளாக பாதிப்பு சரிந்தது

நாமக்கல், அக்.22: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவின் வேகம் குறைந்து வருகிறது. கடந்த 2 மாதமாக தினமும் 150 முதல் 170 வரை தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அரசு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், அரசு மருத்துவமனை டாக்டர்கள், அரசு அலுவலக ஊழியர்கள் என 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். வருவாய்த்துறையில் பணியாற்றி வந்த ஒரு தாசில்தார் கொரோனாவால் உயிரிழந்தார். சுகாதாரத்துறை துணை இயக்குனர், பிஆர்ஓ, கலெக்டரின் டபேதார், பிடிஓக்கள் என நோய் தடுபபு பணியில் தீவிரமாக ஈடுபட்ட வந்தவர்களும் தொற்றுக்கு ஆளாகி தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது.

கடந்த 19ம்தேதி 96 பேர், 20ம் தேதி 95 பேர், நேற்று 68 பேர் என்ற அளவில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று நாமக்கல் வனச்சரகர், மோகனூர் கூட்டுறவு வங்கி பணியாளர், பரமத்திவேலூர் அரசுபஸ் கண்டக்டர், வேலகவுண்டம்பட்டி அரசு பள்ளி ஆசிரியை உள்பட 68 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,349 அதிகரித்துள்ளது. நேற்று 100 பேர் உள்பட மாவட்டத்தில் இதுவரை 7,454 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 91 பேர் உயிரிழந்துள்ளனர். 804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: