நண்பரின் கொலைக்கு பழிவாங்க திட்டம் ஜாமீனில் வந்த அண்ணன் எங்கே என தம்பியை கடத்தி சரமாரி தாக்குதல்

திருச்சி,அக்.22: திருவானைக்காவிலில் நண்பனின் கொலைக்கு பழிக்கு பழிவாங்க, வாலிபரை கடத்தி, ஜாமீனில் வந்த அவரது அண்ணன் இருக்கும் இடத்தை கேட்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அருகே திருப்பைஞ்சீலியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் ராகுல் (22). ஆவின் நிறுவனத்தில் பால் வண்டி டிரைவராக உள்ளார். இவர் திருவானைக்காவல் சீனிவாசா நகரில் உள்ள தனது நணபர் தினேஷ் என்பவரின் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு திருவானைக்காவலில் உள்ள ஒரு மண்டபம் அருகே ராகுல், தினேஷ் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 6 பேர் கும்பல் ராகுலை மட்டும் கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் இதுகுறித்து ரங்கம் ேபாலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ ேகாபிநாத் மற்றும் ேபாலீசார் வழக்கு பதிந்து ராகுலை தேடி வந்தனர். இந்நிலையில் 2 மணி நேரத்துக்கு பின் அந்த கும்பல் ராகுலை திருவானைக்காவல் தாகூர் தெருவில் இறக்கிவிட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டது. இதையடுத்து ராகுல் ரங்கம் காவல் நிலையத்துக்கு வந்து கடத்திய சம்பவத்தை கூறினார். கும்பல் கடத்தியது குறித்து போலீசார் விசாரித்தபோது ராகுல் கூறியதாவது:

திருவானைக்காவல் நரியன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்ேதாம். 6 மாதத்திற்கு முன் நண்பர்களுடன் போதையில் ஏற்பட்ட தகராறில் விக்னேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் எனது அண்ணன் கோகுல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் குடும்பத்துடன் திருப்பைஞ்சீலி சென்றுவிட்டோம். நான் மட்டும் இங்கு தங்கி வேலை செய்து வருகிறேன். உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் பெற்றோர், போலீசார் அறிவுரையின்படி அண்ணன் கோகுல் வெளியூருக்கு சென்று வேலை செய்து வருகிறார்.

அண்ணன் கோகுல் ஜாமீனில் வந்த தகவலறிந்த வெங்கடேஷின் நண்பர்கள், அவரது கொலைக்கு பழிக்கு பழியாக அண்ணனை கொல்ல திட்டமிட்டு அவர் எங்கே இருக்கிறார் என கேட்டு சரமாரி தாக்கியதாக கூறினார். இதையடுத்து ராகுலை கடத்திய லால்குடி திலீப், மேலகொண்டையன்பேட்டை ெதற்கு தெரு பரணிதரன் (எ) பரணி, திருவானைக்காவல் கிருஷ்ணமூர்த்தி (எ) ஒத்த தெரு கிருஷ்ணகுமார், விஜயகுமார், சிவா, சத்யா ஆகிய 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர். நண்பனின் கொலைக்கு பழிவாங்க வாலிபரை கடத்தி, ஜாமீனில் வந்த அவரது அண்ணன் இருக்கும்இடத்தை கேட்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: